Wednesday, April 03, 2013

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

படம் : ஜீன்ஸ்
பாடல் : பூவுக்குள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற
தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்
பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணம்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

4 comments:

  1. பாட்டு நா இது தான்

    ReplyDelete
  2. பிடித்த பாடல் வரிகள்.
    "துளை" செல்லும் காற்று..

    எழுத்துப்பிழை, அருவருப்பு.

    With love from:
    Penang, Malaysia.

    ReplyDelete
  3. Please check spellings before publishing! A beautiful song made ugly by your ignorence! நல்ல தமிழ் கவிஞரை அவமானப்படுத்தியதற்கு நன்றிகள்.
    Humble apologies for highlighting!

    ReplyDelete
  4. 'துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்' உச்சம் தொட்ட வரி.

    ReplyDelete